ஊதியம் கொடுக்காமல் உழைக்கும் பெண்களின் உரிமைகள் பற்றி பேசுவதா ? – மத்திய மாகாண சபை உறுப்பினர் ராம்

Tuesday, March 15th, 2016

பெருந்தோட்டப்பகுதிகளில்  உழைக்கும் வர்க்கத்தினரில் அதிகமாக பெண்களே இருக்கின்றனர். இவர்களின் ஊதிய விவகாரம் எந்த வித முடிவுகளும் எட்டப்படாது ஒரு வருடத்தை நெருங்கி விட்டது இந்நிலையில் மகளிரின் உரிமைகள் பற்றி குரல் எழுப்ப மகளிர் தினத்தை எந்த முகத்தை வைத்துக்கொண்டு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்கின்றன என மத்திய மாகாண சபை உறுப்பினர் ராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் இன்று மகளிர் தினங்களை கொண்டாடுவதற்கு பலரும் தயாராகி வருகின்றனர் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாக ஒரு வருடமாக இன்னும் 14 நாட்களே உள்ளன, அதிக எண்ணிக்கையில் உழைக்கும் வர்க்கமாக உள்ள பெருந்தோட்டப்பகுதி வாழ் பெண்களை வைத்து மகளிர் தின விழாக்களை ஏற்பாடு செய்யும் தொழிற்சங்கங்கள் அவர்களுக்கான ஊதியத்தை பெற்றுத்தர ஒன்றுமே செய்யவில்லை வாழ்வாதாரத்திற்கான உரிமை அவர்களது ஊதியமாகும்.

அதை பெற்றுக்கொடுக்க ஆவண செய்யாத தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மகளிர் தினங்களை ஏற்பாடு செய்கின்றன? ஆகவே உண்மையில் பெருந்தோட்ட பகுதி வாழ் பெண்கள் மகளிர் தினங்ளை புறக்கணிக்க வேண்டும் எனத்தெரிவித்தார்.

Related posts: