கடத்தலில் ஈடுபட்ட ஏழு இலங்கைப் பெண்கள் கைது!
Tuesday, August 9th, 2016
சட்டவிரோத தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏழு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பெங்கலூர் விமான நிலையத்தில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் வசமிருந்து இரண்டு கிலோவுக்கும் அதிகமான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இவற்றின் பெறுமதி 65 இலட்சம் இந்திய ரூபாய்க்கும் அதிகம் எனவும், பெங்களூர் விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கைதுசெய்யப்பட்ட பெண்கள் இந்தியாவின் சென்னை நகரை மையப்படுத்தி தெற்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்படும், சர்வதேச தங்கக் கடத்தல்களுடன் தொடர்புடையவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
Related posts:
மே 11 ஆம் திகதியின் பின்னர் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு புகையிரத திணைக்களம் அமுல்ப்படுத்தியுள்ள ...
மீண்டும் கொரோனா தொற்று – யாழ்ப்பாணத்தில் 14 பேர் தனிமைப்படுத்தலில்!
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தின் அடுத்த கொடுப்பனவு நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் வழங்கப்படும்...
|
|
|


