கஞ்சா வைத்திருந்தவருக்கு 03 மாத சிறை!

Wednesday, September 28th, 2016

கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத்தண்டனையை வழங்கி நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது..

குறித்த இளைஞன் கடந்த 09.06.2016 குருநகர் பகுதியில் 300 கிராம் கஞ்சா பொதியுடன் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்திருந்த வேளை 27.09.2016 மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது குறித்த இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத்தண்டனை வழங்கி யாழ் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்சதீஸ்குமார் தீர்ப்பளித்துள்ளார்.

யாழ் குருநகர் பகுதியில் வீதிகளில் நிற்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள் பொலிஸாரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Vector illustration of a man lock up in prison

Related posts: