கசிப்புடன் ஒருவர் கைது!

புன்னாலைக்கட்டுவன் மத்தாளோடைப் பகுதியிலுள்ள பற்றைக்குள் கசிப்புடன் ஒழிந்திருந்த 35 வயதுடைய நபரொருவரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(25) சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீதியால் பொலிஸார் சென்று கொண்டிருந்த போது அப் பகுதியிலுள்ள பற்றைக்குள் குறித்த நபர் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒழிந்திருந்த நபரைக் கைது செய்தனர். சந்தேகநபரிடமிருந்து ஒரு போத்தல் கசிப்பையும் பொலிஸார் கைப்பற்றினர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - அமைச்சர் நிமல் சிறிப...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
|
|