ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
Sunday, March 26th, 2017
ஒரு வித காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண்ணொருவர் உரிய சிகிச்சை பெறாது தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் மேற்குப் பகுதியைச் சேர்ந்த சிவராசா பாக்கியசீலா(வயது-56) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
கடந்த மூன்று தினங்களாகத் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண்மணி சாதாரண பரசிடமோல் மாத்திரை எடுத்து வந்ததுடன் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் உறவினர்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
ஆயினும், சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பப் பெண்மணி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
குருதி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு உதவுங்கள் - சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகம் பொது அமைப்புகள...
நான்கு புதிய செயலாளர்கள் நியமனம்!
புலிகளுடனான யுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கையிடம் ஆப்கானிஸ்தான் கோரிக்கை!
|
|
|


