ஒரு­நா­ளைக்கு 100 ரூபா சம்­பளமே : சம்பள உயர்வு என்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளது.! – முத்­து­சி­வ­லிங்கம்!

Monday, August 1st, 2016

மலையக தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு, கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் சில மலை­யக அரசியல்வா­திகள் கற்­பனை உலகில் சஞ்­ச­ரிக்­கின்­றனர் என இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முத்­து­சி­வ­லிங்கம் தெரி­வித்துள்ளார்.

ஒரு­நா­ளைக்கு 100 ரூபா சம்­பளமே தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளதே தவிர 2500 ரூபா என்­பது மிகைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாகும் என்று குறிப்­பிட்ட அவர் தேர்­த­லுக்கு பின்னர் ஒன்­றரை வரு­டங்­க­ளாக அர­சுடன் கூட்டுச் சேர்ந்துள்ளோர் கற்­பனை உல­கத்­தி­லேயே சஞ்­ச­ரித்துக் கொண்டிருக்­கின்­றனர். இவர்­கள்தான் இன்று கூட்டு ஒப்­பந்தம் மற்றும் 2500 ரூபா சம்­பள உயர்வு தொடர்­பிலும் கன­வு­க­ளி­லி­ருந்து கொண்டு சவால் விடுக்­கின்­றனர்.

பெருந்­தோட்ட தொழிற்­துறை என்­பது உற்­பத்­தி­யுடன் தொடர்­பு­பட்­டது. இன்று மத்­திய கிழக்கில் தோன்­றி­யுள்ள யுத்தச் சூழ்­நி­லையால் இலங்­கை­யி­லி­ருந்து தேயிலை கொள்­வ­னவு செய்­வது குறைந்­துள்­ளது. இதனால் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்­வினை வழங்க முடி­யாது என முத­லா­ளிமார் சம்­மே­ளனம் கூறு­கி­றது. சம்­பள உயர்வு தொடர்பில் முத­லா­ளிமார் சம்மேளனத்துடன் பல­சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம். ஆனால் அனைத்தும் தோல்­வி­ கண்­டன.எனவே சம்­பள உயர்வு தொடர்­பாக கையெ­ழுத்­தி­டப்­படும் கூட்டு ஒப்­பந்­தமும் கையளிக்கப்படவில்லை.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் அர­சாங்கம் வங்­கி­க­ளி­னூ­டாக தோட்டக் கம்­ப­னி­க­ளுக்கு கடனை வழங்கி தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வை வழங்க சம்­ம­தித்­தது. இதற்­க­மைய தொழி­லா­ளர்கள் வேலைக்கு சமு­க­ம­ளித்தால் மட்டும் ஒரு நாளைக்கு 100 வீதம் சம்­பளம் அதி­க­மாக வழங்­கப்­படும்.

எனவே 2500 ரூபா சம்­பள உயர்வு என்­பது மிகைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாகும். எதிர்­வரும் நாட்­களில் மூன்று திட்ட வரை­புகள் அடிப்­ப­டையில் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் இ.தொ.கா. பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்­ளது என்றும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: