ஐ.நா.மனிதாபிமான சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு நிகழ்வு!

ஆசிய பிராந்திய 2017ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனிதாபிமான சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறியின் இரண்டாவது நாள் ஆரம்பநிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன கலந்துகொண்டார்.
கொழும்பு முவன்பிக் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் , குறித்த பயிற்சிப்பட்டறையினை நடத்துவதற்காக இலங்கையினை தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பங்கேற்பாளர்கள் இவ்வாறான நிகழ்ச்சி திட்டங்களினூடாக அதிகமான விடயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்றும் இதன்போது பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகள் காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒருங்கிணைப்பு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானதுடன் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வில் இலங்கை உட்பட 14 நாடுகளை சேர்ந்த 29 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related posts:
|
|