ஐ. நா. சபையின் விசேட அறிக்கையாளர் இலங்கை விஜயம்!
Friday, August 5th, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசாக் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள இவர் 20 ஆம் திகதி வரை தங்கியிருந்து இலங்கை நிலமைகள் குறித்து ஆராயவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரான இவர் இலங்கை தொடர்பான பல்வேறு தகவல்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்ததாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே சிறுபான்மை மக்கள் தொடர்பான விசேட சிறப்பு அறிக்கையாளர் றீட்டா ஐசாக் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் றீட்டா ஐசாக் சமர்ப்பித்திருந்த அறிக்கையில் பல தவறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அரசாங்கம் அது தொடர்பில் விளக்கம் கோருவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Related posts:
தொடர்கின்றது பிள்ளையானின் விளக்கமறியல்!
யாழில் அதிசயம்..! கண்ணீர் சிந்தும் மாதா சிலை..!
கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் - ஜெய...
|
|
|


