ஐஸ்கிறீம் விற்பனையாளர்களுக்கு அபராதம்!
Tuesday, March 29th, 2016
சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில், ஐஸ்கிறீம் விற்பனை செய்த இருவருக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எ.எம்.எம்.றியால் நேற்று (28) தீர்ப்பளித்தள்ளார்.
சுகாதார பரிசோதகர் பி.சஞ்ஜீவன், கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஐஸ்கிறீம் வானின் சாரதிக்கும் விற்பனையாளருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு அபராதம் விதித்தார்.
Related posts:
வலி.தென்மேற்கில் பரவுகின்றது டெங்கு – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
மழைக் காலத்தை எதிர்கொள்ள குடாநாட்டில் தயார்படுத்தல்கள் ஆரம்பம்!
இலங்கை - பஹ்ரைன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதுடன் பொது நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வ...
|
|
|


