ஐந்து இளைஞர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

நல்லூர் அரசடி வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் பணி புரிந்த இளைஞர்கள் இருவரை வாளால் வெட்டியதுடன், பெற்றோல் குண்டு வீசி வர்த்தக நிலையம் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் வீ. சிவலிங்கம் இன்று புதன்கிழமை(01) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இன்று யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.ரி.வீ கமெராவில் பதிவாகியிருந்த நிலையில் அதிலிருந்து பெறப்பட்ட காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களிடமிருந்து கூரிய ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|