ஏப்பிரல் மாதம் வரை மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது!
Tuesday, December 20th, 2016
எதிர்வரும் மார்ச், மற்றும் ஏப்பிரல் மாதம் வரையில் குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் நாட்டு மக்கள் நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இத தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவிக்கையில் . திருகோணமலை மாவட்டத்தில் ஓரளவிற்கு மழை பெய்யக்கூடும். இவ்வருடத்திலும் இலங்கைக்கு எதிர்பார்த்த மழை பெய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
இதன் பெறுபேறாக குளம் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. விசேடமாக விவசாய நடவடிக்கைகளுக்கும் குடிநீர் வசதிகளுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். 2003, 2004 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இலங்கை இவ்வாறான ஒரு நிலையை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு!
இராணுவத் தலைமையகம் உத்தியோக பூரவமாக புதுவருட கடமை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் நகரில் தீ - மூன்று கடைகள் பாதிப்பு!
|
|
|


