எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானம்!

Friday, March 1st, 2024

தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் மாதாந்த விலை திருத்தம் தொடர்பில் முறையான அறிவித்தலை இன்னமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: