எந்தவொரு சவாலையும் சந்திக்க தயார் – இராணுவத் தளபதி !

நீர்க்காகம் என்ற இராணுவ ஒத்திகை பயிற்சியின் நிறைவு விழா நேற்று திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன தலைமையில் நடைபெற்ற .இந்த விழாவில் பல நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரிகளும் வீரர்களும் பங்கேற்றார்கள்
இந்த நிகழ்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க நாட்டிற்கு விடுக்கப்படும் எதுவித சவாலையும் சமாளிக்க இராணுவம் தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.
குறிப்பாக இரசாயன உயிரியல் கதிர்வீச்சு அணுசக்தி அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதத்தில் இராணுவம் தயார்படுத்தப்படுகிறது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.
Related posts:
பிரான்ஸ் சுற்றுலா முகவர் நிலையத்தின் வருடாந்த சம்மேளனம் இலங்கையில்!
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு - குணமானோரின் எண்ணிக்கையும் 1057 ஆக அதிகரிப்பு – சுகாதார ...
நீதிமன்றின் கட்டளையை மீறி யாரும் செயற்படுவார்களானால் உடனடியாக பொலிசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும...
|
|