எதிர்காலத்தில் நீர்க்கட்டணமும் அதிகரிக்கும் – நகர திட்டமிடல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்!

எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என நகர திட்டமிடல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று(29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நீர் கட்டணம் சீர்த்திருத்தப்படும். நான்கு வருடங்களாக நீர் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
தேர்தல் காலத்தில் கடந்த அரசாங்கத்தினால் நீர் கட்டணம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.வரட்சியான காலநிலை தொடரும் பட்சத்தில் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோக தடை ஏற்படுத்த நேரிடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
Related posts:
வவுனியா மாவட்டத்தில் 141 சிறிய குளங்கள் புனரமைப்பு - விவசாயிகளும் குளங்களின் பாதுகாப்பது தொடர்பில் க...
யாழ் பல்கலையில் அடுத்த வாரம் முதல் பிசிஆர் சோதனைகள் மீள ஆரம்பம்!
நலன்புரி கொடுப்பனவுகள் அடுத்த மாதம் வழங்க நடவடிக்கை - 37 இலட்சம் விண்ணப்பங்களில் 22 இலட்சம் விண்ணப்ப...
|
|