எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு?
Sunday, September 6th, 2020
எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
இரு பிரிவை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்படும்போது, அதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
அதாவது, தனிநபருக்கு நிறைவேற்று அதிகாரம் தடையின்றி முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாத்திரமே குறித்த 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என இந்தக் கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்நிலையில் எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


