எட்டு மாணவர்களுக்கு வகுப்புத் தடை!
Wednesday, May 25th, 2016
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் எட்டு மாணவர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
கலைப் பீடத்தின் இரு மாணவர்கள் மற்றும் முகாமைத்துவ பீடத்தின் ஆறு மாணவர்களுக்குமே இவ்வாறு தற்காலிகமாக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விரிவுரையாளர்களை அச்சுறுத்தியமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இந்த வகுப்புத் தடையை கண்டித்து சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் இன்று பகல் முதல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
Related posts:
மைத்துனரை கொலை செய்தவருக்கு மரணதண்டனை!
மாவின் விலையை அதிகரிக்க அனுமதியளிக்க போவதில்லை - அமைச்சர் பி.ஹெரிசன்!
700 ரூபாவை கடந்த வெங்காயத்தின் விலை!
|
|
|


