எஜமானை தேடி பல நாட்கள் காத்திருக்கும் நாய்!

சில தினங்களுக்கு முன்னர் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரை 33 உயிர்கள் பலியாகி உள்ளன. மேலும் 50 பேரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் புதைந்த வீட்டின் மீத 14ஆம் திகதி முதல் இன்று வரை அமர்ந்திருக்கும் நாய் ஒன்றின் புகைப்படமே இவ்வாறு வெளியாகியுள்ளது.
தனது எஜமானை காணாமல் இந்த நாய் தவித்து வருகிறது. பல நாட்களாக உணவு, நீரின்றி இந்த நாய் அங்கு அமர்ந்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். தனது எஜமான் உயிரோடு மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இந்த நாய் காத்திருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இன்றுமுதல் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டிருந்தும் தபால் சேவைகள் முமுமையாக இடம்பெறவில...
புதிய பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!
நிலவும் சீரற்ற காலநிலை - வடக்கு மாகாணத்தில் இதுவரை 19 ஆயிரத்து 370 பேர் பாதிப்பு – அரச அதிபர்கள் அனர...
|
|
எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளது - இலங்கை - கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியி...
வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு - லேடி ...
பெற்றோல் விலை உயர்வு, கட்டண திருத்தத்தில் தாக்கம் செலுத்தாது - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ...