எச்சரிக்கை நீடிப்பு!

Thursday, November 30th, 2017

காலநிலை சீர்கேட்டால் மலையகம் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்தும் கடும் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இரத்தினபுரி, மாத்தறை, நுவரெலியா, காலி, மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கட்டிட ஆய்வு பணிமனை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக அந்த பிரதேசத்தைவிட்டு வெளியேறுமாறு மக்களை அனர்த்த முகாமைத்துவ மையம் எச்சரித்துள்ளது.

Related posts: