எச்சரிக்கை! நாட்டில் பலமான காற்று வீசும்! – வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டைச் சுற்றியுள்ள கடற் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இக்காலப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சில பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாகவும் இந்த நிலை நாளை வரை நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
யாழ். துன்னாலை வன்முறைச் சம்பவம்: 39 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
அனைத்து திரிபடைந்த கொரோனான வைரஸ்களினாலும் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் தடுப்பூசிக்கு உண...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா!
|
|