ஊழல் மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஊடகங்கள் போராட வேண்டும் – அமைச்சர் கயந்த கருணாதிலக்க

Wednesday, May 4th, 2016

தகவல் அறியும் சட்டமூலத்தை சட்டமாக்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடாது. மாறாக இந்த சட்டமூலத்தை அனைத்து ஊடகவியலாளர்களும் பின்பற்றி செயலாற்ற வேண்டும். அதன்போதே ஊடக சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

ஊடக மறுசீரமைப்பு தொடர்பான ஆய்வு முடிவின் இறுதி அறிக்கை,நேற்று செவ்வாய்க்கிழமை லக்ஷ்மன் கதிர்காமர் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் –

நாட்டில் தற்போது அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுவரும் இத்தருணத்தில், ஊடகத்துறை மறுசீரமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். அரசியல் மாற்றத்துக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக அவசியமாகும் பொதுமக்களின் நலன் கருதிய சேவைகளையே ஒலி,ஒளிபரப்பு ஊடகங்கள் முன்னெடுக்கவேண்டும். அதன் செயற்பாடு சமூகத்தின் பிரதிபலிக்காக அமைய வேண்டும். அதேபோல் போல் அரச ஊடகங்களும் மக்களின் சேவை நலன்கருதி செயலாற்ற வேண்டும். பெரும்பாலான ஊடகங்கள் அவ்வாறு செயலாற்றுவதில்லை. இதற்கென சுயாதீன கட்டுப்பாட்டு சபை ஏற்படுத்த வேண்டும்.

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார். மேலும், ஊடகவியலாளர்களின் சுதந்திரமாக செயற்பட உறுதியான ஊடக தொழிற்சங்கங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் வெகுஜன ஊடகங்களுக்கு தேவையானவற்றை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் ஊழல் மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஊடகங்கள் போராட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்

Related posts: