ஊர்காவற்துறை சிறுமி தொடர்பில் விசாரணை!
Monday, August 15th, 2016
ஊர்காவற்துறையில் காணாமற்போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 வயதான குறித்த சிறுமியின் சடலம் அவருடைய வீட்டிருந்து 400 மீற்றர் தொலைவிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து நேற்று (14) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி காணாமற்போனதாக நேற்று முன்தினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் மரணம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.
Related posts:
சிறந்த ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க முடியும் - நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன!
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச காப்புறுதி!
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்க விரைவில் சினோபெக் நிறுவனத்துடன் முதலீட்டு ஒப்பந்தம் - அம...
|
|
|


