ஊர்காவற்துறையில் 18 வயது யுவதிக்கு மயக்கமருந்து தூவி வன்புணர்வு முயற்சி: சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
 Tuesday, April 25th, 2017
        
                    Tuesday, April 25th, 2017
            
ஊர்காவற்துறையில் யுவதியொருவருக்கு மயக்க மருந்து தூவி வன்புணர்வுக் உட்படுத்த முயற்சித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்றுமன்தினம் யாழ். ஊர்காவற்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த நபரொருவர் 18 வயது யுவதி மீது மயக்கமருந்து தூவி வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.
குறித்த நபரின் நடவடிக்கையால் சுதாகரித்துக் கொண்ட யுவதி கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்துள்ளார். அங்கு வந்த அயலவர்கள் சந்தேகநபரை மடக்கிப் பிடித்து ஊர்காவற்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நபர் பொலிஸ் கடமையிலிருந்து நீக்கப்பட்ட மட்டக்களப்பு களுவாஞ்சிக் குடிப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் எனது தெரியவருகிறது.
Related posts:
அக்கராயனில் குடிநீர் விநியோகம் தடை - பொதுமக்கள் குற்றம் சாட்டு!
பொருட்கள் விநியோகத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் 21 ஆம் திகதிவரை நீடிப்பு...
பெப்ரவரியில் சுமார் 11 ஆயிரம் சுற்றுலா பயணிகளுக்கு மத்தள விமான நிலையம் வசதியளித்துள்ளதாக தகவல்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        