ஊடகத்துறைக்கான இலவசக் கற்கை நெறி!

ஊடகத்துறைக்குள் பெண்களை உள்ளீர்க்கும் இலவசக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கனடா பல்கலைக்கழக சேவையின் அனுசரணையில் பெண்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அடிப்படை ஊடக கற்கை நிலையம் இணைந்து ஆரம்பிக்கின்ற 4 மாதகால (முழுநேர) பயிற்சி இதுவாகும்.
ஜி.சி.ஈ. சாதாரண தரத்தில் தோற்றிய ஊடகத்துறையில் பணியாற்ற விரும்புகின்ற 18 தொடக்கம் 28 வயதிற்குட்பட்ட யுவதிகள் விண்ணப்பிக்க முடியும்.
கற்கைநெறியானது ஊடகவியல், ஆங்கிலம் மற்றும் கணினி ஆகிய பாடத்திட்டங்களை உள்ளடக்கியதாகும். விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்பாகக் கிடைக்கும் வகையில் அடிப்படை ஊடக கற்கை நிலையம் இல 149, குட்செட் வீதி, வவுனியா எனும் முகவரிக்கோ அல்லது கஅநiளெவவைரவழைn@பஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும். மேலதிக தகவல்களுக்கு இணைப்பாளர் 024 222 8090, 077 2809990 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
Related posts:
|
|