உள்ளூராட்சி மன்றத் தேர்தல்சட்டத்தினால் சிறுபான்மையின மக்களுக்கு அநீதி !
Saturday, August 26th, 2017
2012ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல 22ஆம் இலக்க சட்டத்தினால் எல்லை நிர்ணயத்தின் போது சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என மகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய பணிகளை தொடர்ந்தும் முன்னெடு;த்திருந்தால் தேர்தல் நடத்த மேலும் காலம் எடுத்திருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.
புதிய சட்டத்தினால் பொறுப்புக் கூறக்கூடியவர்கள் அரசியல் பயணத்தில் இணைந்து கொள்வார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்ட அமைச்சர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலத்தினால் எதிர்கால அரசியல் பயணத்தில் கற்றறிந்தவர்கள் இணைந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தொவித்த அமைச்சர் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் மகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


