உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!
Sunday, November 21st, 2021
உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தேர்தல்களை நடத்தாது பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் என்பனவற்றுக்கான பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட உள்ளது.
இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவணை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெருந்தொற்று நிலைமை மற்றும் பொருளாதார பிரச்சினை என்பனவற்றைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்.கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடல் 5.6 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு !
துரையப்பா விளையாட்டு மைதானம் விரைவில் நவீனமயமாக்கப்படும் - அமைச்சர் நாமல் உறுதி!
இந்தியா, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்தால் இலங்கை போன்ற நாடுகள் நன்மை பெறும் - அமைச்சர் அலி சப்ர...
|
|
|


