உரிய திட்டங்கள் இன்றி நாட்டை திறப்பதன் மூலம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் – அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்!
Monday, May 11th, 2020
நாட்டை இன்றுமுதல் வழமை நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருந்தபோதிலும் அதற்கான சரியான திட்டங்களை முன்வைக்கவில்லை என அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் உரிய திட்டங்கள் இன்றி நாட்டை திறப்பதன் மூலம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என குறிப்பிடட்டுள்ள அவர் இந்த நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் நாட்டிற்குள் மேலும் பரவக்கூடும் எனவும் மருத்துவர் ஜயந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – பொரளையில் சுவசேவா சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ் சா்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள செயற்பாடுகள் ஆரம்பம்!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
களனி பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு மாணவர்களுக்கு அவசர உத்தரவு!
|
|
|


