உரம் விநியோகிக்க விரிவான நடவடிக்கை – தேசிய உர செயலகம்!
Thursday, January 4th, 2018
உரத்திற்கு தட்டுப்பாடு நிலவும் பிரதேசங்களை இனங்கண்டு உரிய பகுதிகளுக்கு தேவையான உரத்தை விநியோகிக விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யூரியா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தனியார் துறையிடமிருந்து யூரியா பெற்றுக் கொள்ளப்படவிருக்கிறது. 40 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் விரைவில் இலங்கையை வந்தடையவிருக்கிறது. என்று தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமையஇ பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு உரம் கிடைக்கவிருக்கிறது. பெரும்பாலான விவசாயிகளுக்கு தேவையான உரம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்போக உரத்திற்கென இதுவரை ஏழு தசம் ஐந்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக தேசிய உர செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அதிபருக்கு மனித உரிமை ஆணைக்குழுவால் அழைப்பாணை!
பகிடிவதை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 28 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!
கட்டாய முகக்கவசம் அணியும் சட்டம் இன்றுமுதல் அமுல் : மீறினால் பிடி ஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்யப...
|
|
|


