உயர்தர பரீட்சை முடிவுகளில் மாவட்ட ரீதியாக முதலாம் இடம்பெற்ற மாணவர்களின் விபரம்!

Saturday, January 7th, 2017

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களின் விபரம்  வருமாறு:-

உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவியே வவுனியா மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் உயிரியல் பிரிவில் மாத்தறை – ரஹூல கல்லூரியின் மாணவன் ஆர்.ஜெ.நிஷல் புன்சிறி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் ஆனந்த கல்லூரியின் மாணவன் முதித அகலங்க முதலாம் இடத்தை பெற்று கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவன், பத்மநாதன் குருபரேஷன், கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றிய யாழ்ப்பாணம் – சுன்னாகம் – ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன், கனகசுந்தரம் சதுர்ஸஜான் முதலிடம் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவு மற்றும் கணிதப்பிரிவில் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி முதலிடத்திடம் பெற்றுள்ளதாக கல்வித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டம் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை விஞ்ஞானப்பிரிவில் தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.இம்முறை மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும் பத்மகைலைநாதன் டிலூஜன் 3 ஏ தர சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இது போன்று ஏனைய மூன்று பிரிவுகளிலும் (காலை, வர்த்தகம், கணிதம்) இம்முறை 3 ஏ தரச்சித்திகளை பெற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை சதனை படைத்துள்ளதுடன் அனைத்து பிரிவுகளிலும் அதிகூடிய மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது .

நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா கோல்புறுக் பாடசாலை மாணவி கலைப்பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி 3 ஏ தர சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

manavikal-680x365

Related posts: