உமா ஓயா திட்டம் தொடர்பில் தெரிவுக்குழு நியமனம்!
Thursday, July 6th, 2017
உமா ஓயா திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எடுத்துள்ளனர்.உமா ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் பண்டாரவளை பகுதியில் மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தும் நோக்கில் ஜனாதிபதி விசேட குழுவொன்றையும் நியமித்திருந்தார்.இதற்கு மேலதிகமாக தற்போது அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் உமா ஓயா திட்டம் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
Related posts:
முப்படையினர் சம்பளம் ரூபா பத்தாயிரத்தால் அதிகரிப்பு!
எரிபொருள் நெருக்கடி: ஹெலிகொப்டர் வழங்கப்படாது என இலங்கை விமானப்படை தெரிவிப்பு!
இந்தியாவுடன் விமான பயிற்சியில் ஈடுபடும் இலங்கை - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன...
|
|
|


