உடுத்துறைப் பகுதியில் கைப்பற்றப்பட்ட இருபது கிலோ கேரளாக் கஞ்சாப் பொதிகள்
Sunday, May 7th, 2017
யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் பகுதியில் இருபது கிலோ கேரளாக் கஞ்சாப் பொதிகள் நேற்று சனிக்கிழமை(06) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.
வடமராட்சிக் கடற்கரை மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இருபது கிலோக் கேரளக் கஞ்சாப் பொதிகளே இதன் போது மீட்கப்பட்டுள்ளன. குறித்த கஞ்சாப் பொதிகளைக் கடற்படையினர் மீட்டுப் பளைப் பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.குறித்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கைபேசியால் மாட்டிய திருடன்!
யாழ். மாவட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி - கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நாளை வழங்கப்படும்...
ஜனநாயக முறையை மறுப்பதாயின் அதன் பயங்கரமான கடந்தகால வரலாற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் - பிரதமர் மஹ...
|
|
|


