உங்கள் புதிய அடையாள அட்டை இலக்கங்களை தெரிந்துகொள்ள வேண்டுமா?

Thursday, September 8th, 2016

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 12 இலக்கங்களை கொண்ட தேசிய அடையாள அட்டையை, வாக்காளர்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை, தேர்தல்கள் செயலகம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அதனடிப்படையில், http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்துக்குச் சென்று, அதிலிருக்கின்ற 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை கிளிக் செய்யவும். அதில் உள்ள கட்டங்களில், தற்போது நீங்கள் பயன்படுத்தும் ஒன்பது இலக்கங்களுடன் ஆங்கில எழுத்து மற்றும் நிர்வாக மாவட்டத்தைத் தட்டச்சுச் செய்யவும்.

உங்களுடைய தேசிய  அடையாள அட்டை இலக்கத்தை சரியாகப் பதிவு செய்தால், 12 இலக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதுவரை காலமும், ஒருவர் பிறந்த ஆண்டின் இறுதி 2 இலக்கங்களே, அடையாள அட்டையின் தொடக்கமாக இருந்த நிலையில், தற்போது 4 இலக்கங்களும் சேர்க்கப்பட்டே, இந்த 12 இலக்கங்கள் பெறப்பட்டுள்ளன.

internet

Related posts: