இ.போ.ச. 749 வழி இலக்க பேருந்துச் சேவை நிறுத்தம் – மக்கள் குற்றச்சாட்டு!

Sunday, February 10th, 2019

இலங்கை போக்குவரத்துச் சபையின் 749 வழி இலக்கமுடைய பேருந்துச்சேவை கடந்த ஒரு மாத காலமாக இடம்பெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறித்த பேருந்துச் சேவை யாழ். சாலையில் இருந்து கே.கே.எஸ்.வீதி ஊடாக கொக்குவில் சந்தி ஆணைக்கோட்டை, மானிப்பாய், சண்டிலிப்பாய், சங்குவேலி, ஆலங்குளாய், அளவெட்டி, மல்லாகம் சந்தி ஊடாக தெல்லிப்பழை வைத்தியசாலை வரை இடம்பெற்று வந்தது.

இச்சேவை நிறுத்தப்பட்டமையால் பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள், வைத்தியசாலை செல்வோர் எனப் பலரும் அசௌகரியத்துக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் எதிர்நோக்கும் இப் பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டுமெனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: