இஸ்லாமிய புதுவருடத்தை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று!

Saturday, October 1st, 2016

ஹிஜ்ரி 1438 முஹர்ரம் புது­வ­ரு­டத்தை தீர்­மா­னிக்கும் பிறைக்­குழு மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நடை­பெ­ற­வுள்­ளது.

இஸ்­லா­மிய புது வரு­டத்தை தீர்­மா­னிக்கும் நாள் இன்­றாகும். எனவே இன்று மஹ்ரிப் தொழுகை நேர­மான மாலை 6.03 மணி முதல் முஹர்ரம் தலைப்­பிறை பார்க்­கு­மாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. தலைப்­பிறை கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் 0115234044, 0112432110ஆகிய தொலை­பேசி இலக்­கங்­க­ளுடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறும் கேட்­டுக் கொள்ளப்­ப­டு­கின்­றனர்.

இதே­வேளை கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இன்று மாலை நடை­பெ­ற­வுள்ள பிறைக்­குழு மாநாட்டில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சயம கலா­சாரத் திணைக்­கள உறுப்­பி­னர்கள் உட்பட பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

AdobeStock_91343272

Related posts: