இவ்வருட விவசாய போகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானம் கடந்த 15 வருட கால வருமானத்தை விடவும் அதிகம் – ஏற்றுமதி விவசாய திணைக்களம் அறிவிப்பு!

Sunday, November 21st, 2021

கடந்த 10 முதல் 15 வரையான வருட காலப்பகுதியில் விவசாய போகத்தின் ஊடாக ஈட்டப்பட்ட அதிக ஏற்றுமதி வருமானம் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆண்டின் முதல் 10 மாதங்களில் கடந்த ஆண்டை விடவும் 22 பில்லியன் ரூபாவுக்கும் அதிக ஏற்றுமதி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதேவேளை விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் இல்லை என தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் சிலர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நுரைச்சோலையில் செயலிழந்த முதலாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை!
வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள...
அதிகாரத்துக்கு செலவிடும் பணத்தை வயிற்றுப்பசிக்கு போராடுவோருக்கு வழங்குவதே சிறந்தது - அமைச்சர் நஸீர் ...

விவசாய உற்பத்தி கருதியதாக துறைசார்ந்தோருக்கு பல்வகை நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சரவைப் பேச்சா...
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உயர்நதரப் பரீட்சை முடிவகள் வெளிவரும் –கல்வி அமைச்சு அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் - இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவிப்பு!