இவ்வருடம் வவுனியாவில் மழை வீழ்ச்சியில் பாரிய பின்னடைவு!
Saturday, December 24th, 2016
வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாரிய மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வவுனியா வளிமண்டல அவதானிப்பாளர் தாமோதரம் சதானந்தம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1795.7 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளதாகவும் 2016 இவ்வருடம் ஜனவரியிலிருந்து டிசம்பர் 22.12.2016 வரையான காலப்பகுதியில் 1114.5மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த மே மாதத்தில் மட்டுமே அதிகளவான மழைவீழ்ச்சி 477.4மில்லிமீற்றறாக பதிவாகியுள்ளதாகவும் இதனடிப்படையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் மழை வீழ்ச்சியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
பேருந்து விபத்தில் 20 பேர் காயம்!
யாழ்.மாநகரப் பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டில்!
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை - அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!
|
|
|


