இழைய வாழை வளர்ப்பு செய்கை மேற்கொள்ள 29 விவசாயிகள் நாட்டம்!

யாழ்குடாநாட்டில் இழைய வளர்ப்பு வாழை இனச் செய்கையில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்தச் செய்கையில் 29 செய்கையாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
செய்கையாளர் ஒருவருக்கு 220 இழைய வளர்ப்பு வாழைக்குட்டிகள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. அதனைவிட வாழை குலை போடும் பட்சத்தில் அதனை நோய்த்தாக்கத்திலிருந்து பராமரிக்கவும், குலையின் பருமனை அதகரிக்கும் முகமாகவும் விசேட பொலித்தீன் உறைகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்வேலி, புன்னாலைக்கட்டுவான், கோப்பாய், சிறுப்பிட்டி, ஏழாலை போன்ற பகுதிகளைச் சேர்ந்த வாழைச் செய்கையாளர்கள் இந்த முறை இந்த புதிய இழைய வளர்ப்பு வாழைச் செய்கையில் ஆர்வம் காட்டியுள்ளனர். இந்தச் செய்கையில் மேலும் ஆர்வம் காட்டும் செய்கையாளர்களுக்கு இந்த இன வாழைக் குட்டிகளை மானிய விலையில் பெற்று வழங்கவும் விவசாயத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Related posts:
சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம்?
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டம் - சுகாதார அமைச்சர் ...
நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!
|
|