இளைஞனை தாக்கி கைபேசி அபகரிப்பு: சந்தேக நபர் கைது!
Monday, December 5th, 2016
வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை இரும்பு சட்டத்தினால் தாக்கி அவரிடம் இருந்த 7500ரூபா பெறுமதியான கைபேசியினை அபகரித்து சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30மணிக்கு சுதுமலை இராமலிங்கம் வீதிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த புஸ்பராசா ஜெனிஸ்குமார் (வயது-22) என்ற இளைஞன் காயமடைந்து யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் வழங்குப் பதிவு செய்துள்ள சுன்னாகம் பொலிஸார், சந்தேகத்தில் ஒருவரை கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் மேலும் தேடப்பட்டு வருகின்றனர்.

Related posts:
கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி வைத்தியசாலையில் அனுமதி!
இராணுவ பிரதானியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமனம்!
வணக்கஸ்தல மண்டபம் இடிந்து வீழ்ந்ததில் 8 பேர் காயம்!
|
|
|


