இலத்திரனியல் பஸ் சேவையும் அடுத்த வருடத்தில்!
Tuesday, December 20th, 2016
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இணைத்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள மின்சாரத்தில் ஓடும் (இலத்திரனியல்) பேருந்து சேவைகளை அடுத்த வருடம் ஆரம்பத்தில் தொடங்கவிருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக இலங்கை போக்குவரத்துச் சபை 5000 பேருந்துகளையும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் 500 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
இதற்காக புதிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அனுமதிப்பத்திரங்களை கொண்டுள்ளவர்கள் மூலம் பேருந்துகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
வலிகாமம் மேற்கில் புகையிலை செய்கைக்கு வருகிறது தடை!
மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்!
இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயார் – ஜப்பான் அரசாங்கம் அறிவிப்பு!
|
|
|


