இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய இளவரசி ஹேனிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று(10) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, பிரித்தானிய இளவரசி ஹேன் நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய அவரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
அத்துடன், பிரித்தானிய இளவரசியின் கணவரான வைஸ் அட்மிரல் சேர்.டிம்.லோரன்ஸும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஊர்காவற்றுறையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெட்டிக் கொலை!
புகையிரதக் கட்டணம் அதிகரிப்பு!
கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்த, ஒரு நோக்கத்திற்காக போராடிய எவரையும் கைவிட முடியாது - பிரதம...
|
|
சுவாசப் பிரச்சினைகள், இருப்பின் தங்கள் பகுதியின் பொது சுகாதார அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொள்ளவும் -...
கொரோனா தொற்றின் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு கடைகளில் குவியும் மக்கள்!
வைரஸ் நோயினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேர...