இலங்கை மீனவர் 9 பேர் விடுவிப்பு!
Monday, April 18th, 2016
இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த 9 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 9 மீனவர்களும் சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்..
தேவேந்திரமுனை மற்றும் கந்தர கடல் பகுதியூடாக மீன்பிடிக்கு சென்றவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உறவுகளைத் தேடியே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிக முறைப்பாடு - அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப...
இரட்டை பிரஜாவுரிமையாளர்களுக்கு அரச பதவிகள் கூடாது!
வாகன விபத்துக்கள் அதிகரிப்பு - இன்று நாட்டின் பல பாகங்களில் விபத்துக்களில் 08 பேர் பலி!
|
|
|


