இலங்கை பங்கு கொள்ளும் பாரிய சர்வதேச நீரியல் தொடர்பான பயிற்சி!
Monday, June 4th, 2018
உலகிலேயே பாரிய சர்வதேச நீரியல் தொடர்பான பயிற்சி ஒன்று நடைபெறவுள்ளது. இதில் இலங்கை உட்பட 26 நாடுகள் பங்கு கொள்ளவுள்ளன.
எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை ஹவாய் தீவுகள் மற்றும் தெற்கு கலிபோனியா கடல்பிராந்தியத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த சர்வதேச பயிற்சி நடவடிக்கையில் இலங்கை முதன் முறையாக பங்கு கொள்கின்றது.
குறித்த பயிற்சியில் 47 கப்பல்கள், 5 நீர் மூழ்கி கப்பல்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பல ரக வானூர்திகள் பங்கு கொள்கின்றன. இதுதவிர 26 நாடுகளைச் சேர்ந்த 25 ஆயிரம் பேர் பங்குகொள்ளவுள்ளனர்.
கடலில் ஏற்படும் அபாய காலத்தில் நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சிகளில், பாதுகாப்பு நடவடிக்கைகள், கடல்வழி பாதை பாதுகாப்பு உட்பட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நீரியல் பயிற்சி நடவடிக்கைகள் முதன் முறையாக 1971ஆம் ஆண்டு ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


