இலங்கை அகதிகள் சென்னையில் பேரணி!

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க கோரியும் இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை முதலமைச்சர் பணியகத்தில் கையளித்தனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் அகதிகள் நாடு திரும்பும் போது செலுத்த வேண்டிய தண்டப்பணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
Related posts:
வட கொரியாவுக்கு உதவும் சாத்தியக்கூறுகள் குறைவு - தென் கொரியா !
டெங்கின் தாக்கம் : அவசரமாக மூடப்படும் 66 பாடசாலைகள்!
கேரளா விமான விபத்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 18 அதிகரிப்பு!
|
|