இலங்கையில் நில அதிர்வு!
Thursday, April 26th, 2018
இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள ஹட்டன் – டிக்கோயா, தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது 24 வீடுகள் கொண்ட தொடர் லய குடியிருப்பிலுள்ள 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், ஏனைய குடியிருப்புக்களில் சிறு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,
இன்று அதிகாலை 5 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதுடன் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் உடைந்தன. இதன்போது உறங்கிக் கொண்டிருந்த 40 வயதான சிவானந்தன் என்பவரின்மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் நில அதிர்வு மற்றும் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Related posts:
|
|
|


