இலங்கையின் சட்டமா அதிபராகும் தமிழர்!
Friday, May 21st, 2021
பதில் மன்றாடியார் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை புதிய சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபராக செயற்பட்ட தப்புல டி லிவேராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
அதற்கமைய, பிரதி மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரட்ணத்தை சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவைக்கு ஜனாதிபதியினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதியின் தீர்மானத்துடன் இசைந்து செல்ல முடிவு செய்துள்ளது.
அவர், இலங்கை சோசலிஷ குடியரசாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையின் சட்டமா அதிபராக பதவி ஏற்கவுள்ள 3ஆவது தமிழரும், 4வது சிறுபான்மையினருமாவார்.
Related posts:
அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!
விளையாட்டுத்துறை அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றார் நாமல்!
துறைமுக அதிகார சபையின் கீழ் கிழக்கு முனையம் முழுமையாக பராமரிக்கப்படும் – பிரதமர் மஹிந்த ரரஜபக்ச உறுத...
|
|
|
கொரோனாவை அடுத்து நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்...
2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாட்டின் வறுமை ஒழிப்பின் ஆரம்ப புள்ளியாகும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிப...
உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்படமாட்டாது - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலை குறித்து வர...


