இறக்குமதிப் பொருட்களின் வரிகள் இன்றுமுதல் அதிகரிப்பு – லங்கா IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறை இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சீனி, பருப்பு, பேரீட்ச்சம் பழம், டின் மீன், சிவப்பு வெங்காயம், வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு, தோடம்பழம், அப்பிள் பழம் , யோகட் உள்ளிட்ட பல பொருட்களுக்கான வரியே இவ்வாறு திருத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே லங்கா IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவுமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலையை 5 ரூபாயினால் அதிகரிக்க லங்கா IOC நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக்கட்சியின் 2003ஆம் ஆண்டு அரசாங்கத்தின் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இலங்கையின் நிதியமைச்சுக்கு அறிவிக்காமலேயே விலையை அதிகரிக்கும் அதிகாரத்தை லங்கா ஐஓசி நிறுவனம் கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|