இரு தினங்களில் சாதகமான பதில் இல்லையேல் மீண்டும் போராட்டம் – முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம்!
Saturday, December 3rd, 2016
ஜனாதிபதி செயலகத்தில், மேலதிக செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, முச்சக்கரவண்டி சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இருந்தும் இந்த கலந்துரையாடலில் தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அடுத்துவரும் இரண்டு தினங்களில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டதாகவும் இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு வாரத்திற்குள் தீர்வு எட்டப்படாவிடின், கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களையும் மறித்து தாம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
பெற்றொல் விலை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித மாற்றமும் இல்லை!
யாழ் குடாநாட்டில் ஓய்வூதியக் கொடுப்பனவு பெறுவோருக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடு – யா...
இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்ள இலங்கை இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டும் – IMF இன் தகவல்...
|
|
|


