இராணுவ வீரர் பலி!

Monday, September 19th, 2016

மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் பத்தாவது காலாட்படை முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு,  நேற்றுமுன்தினம் (18) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாத்தறை மாவட்டம்,  வில்கடுவ என்ற இடத்தைச் சேர்ந்த டி.ஏ.ஏக்கநாயக்க (வயது 30) இராணுவ வீரரே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மேற்படி இராணுவ முகாமின் இராணுவத்தினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு இராணுவத்தினர் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

gun-and-blood-suicide-635x406

Related posts: