இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி பதவியிலிருந்து நீக்கம்!

Thursday, October 20th, 2016

 

இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி பிரிகேடியர் சுரேஷ் சலேயை அந்த பதவியில் இருந்து நீக்க பாதுகாப்பு சபையில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் 2011ஆம் ஆண்டு அந்த பதிவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ராஜபக்ச ஆட்சி காலப்பகுதியில் இடம்பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் கொலை, ஜோசப் பரராஜசிங்கம் கொலை, ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போன்மை, ஊடகவிலாயலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, த நேஷன் ஆசிரியர் தாக்கப்பட்டமை, ஊடகவிலாளர் நாமல் பெரேரா தாக்கப்பட்டமை, ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்த இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானியினால் திட்டமிடப்பட்டுள்ளதுடன் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய இராணுவ புலனாய்வு பிரிவு பிரதான அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்குள் பிரிகேடியர் அமல் கருணாசேகர, பிரிகேடியர் அருண வன்னிஆராச்சி, பிரிகேடியர் ஜம்மிக லியனகே, பிரிகேடியர் கபில ஹென்தாவிதாரன ஆகியோர் முதன்மையானவர்களாகும். எப்படியிருப்பினும் இந்த அனைவரினதும் செயற்பாடுகளின் முடிவுகளுக்கு பிரிகேடியர் சுரேஷ் சலே என்பவருக்கே முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

625.117.560.350.160.300.053.800.210.160.90

Related posts: