இராணுவ தலைமையகதிற்கு சென்ற ஜனாதிபதி !
 Wednesday, August 4th, 2021
        
                    Wednesday, August 4th, 2021
            
பத்தரமுல்லை – அக்குரேகொட இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்பளித்துள்ளார்..
இதன்போது, ஜனாதிபதிக்கு இராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டுள்ளது.
Air Mobile படைப்பிரிவின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே இதன்போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பான தகவல்கள் அடங்கிய புத்தகத்தையும் இந்த விஜயத்தை நினைவுகூர்வதற்கான ஞாபகார்த்த சின்னத்தையும் இதன்போது இராணுவத் தளபதி ஜனாதிபதிக்கு வழங்கினார்.
இராணுவ தலைமையகத்திலுள்ள நூதனசாலை உள்ளிட்ட சில இடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டிருந்தமை குகுறிப்பிடத்தக்கது.
Related posts:
கரவெட்டியில் மாணவியை கடத்த முயற்சி !
கைதிகள் அனுபவித்த துன்பங்கள் போதும்: ரில்வின் சில்வா!
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வருவதை வெளிநாட்டு சக்திகளே தடுத்தன  - அடுத்த 12 வருடங்களில் இலங்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        