இரண்டே மாதங்களில் இலக்கை எட்டிய இலங்கை!
Tuesday, August 9th, 2016
மீன் ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கை மீன் தயாரிப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் இந்த இலக்கை இலங்கை எட்டியுள்ளது.
முன்னதாக, இந்த வரிசையில் 11ஆம் இடத்தில் இலங்கை இருந்ததாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த வருடத்தில் இலங்கை அலங்கார மீன் ஏற்றுமதியில் 2400 மில்லியன் ரூபா வரை வருமானம் ஈட்டியுள்ளது. எதிர்வரும் இரு வருடங்களில் இந்த தொகையை மேலும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக, மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
கடந்த ஆண்டை விட 16.5 வீதத்தால் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு ...
50,000 இளைஞர்களுடன் தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் ஆரம்பம் - ஜனாதிபதி ஊடக பி...
|
|
|


